குளத்தில் ஓர் அரசியல்
குளத்தில் ஓர் அரசியல்


தெளிந்த நீரோடை ஒன்று சேர்ந்து
ஒரு குளத்தில் கலந்தனவே!!
கூடி வாழ்ந்த குளத்து உயிர்கள்
மகிழ்ச்சியில் காலம் ஓடினவே!!.
குளத்தின் கரையை மேம்படுத்த
கூடி ஒரு தலையை தேர்ந்தெடுத்தனவே!!.
ஒரு தலை இரு தலையாக
குளத்தையே குட்டையாக்கினவே!!
மீண்டும் குட்டையை குளமாக்க
பல தலை உருவானதவே ?..
எந்த தலையும் சரி இல்லையே
என உயிர்கள் புலம்பினவே..
அதற்குள் பல தலைகள் சேர்ந்து
குட்டையையும் கூவம் ஆக்கினவே!..