அப்பாவின் அருமை
அப்பாவின் அருமை
அப்பாவின் அருமை உனக்கு தெரியுமா
அவர் படும் துன்பம் யாதெனில் புரியுமா??
அடிக்கிறார் அப்பா
திட்டுகிறார் அப்பா
அசிங்க படுத்துகிறார் அப்பா
என மட்டுமே உனக்கு தெரியும்,
அவருக்கு பின்னால் நடக்கும் வேதனை உனக்கு தெரியுமா???
உன் அடி பாதம் முத்தமிட்டு
ஊர் முழுக்க சத்தமிட்டு
அவர் அடி நெஞ்சம் கொட்டமடிக்க நீ பார்ததுண்டா??
படிக்கும் வயதில் உன் படிப்புக்காக
அவர் மாத சம்பளத்திலிருந்து
மதிய சாப்பாட்டை விளக்கி
பணம் சேர்த்தது உனக்கு தெரிந்ததுண்டா??
குழந்தை இருக்கிறான் சாப்பிட
நொறுக்கு தீனி வாங்க
அவர் தேனீர் விட்டார் அது புரிந்ததுண்டா??
தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழன்
உன் தோழன் என்றாவது அவன்
படும் கஷ்டத்தை பகிர்ந்ததுண்டா??
வெளியே சென்றால் உன்
பசி போக்க சட்டை பையிலிருந்து
பத்து ரூபாய் எடுத்து செலவிட்டு
பச்ச தண்ணிய குடிச்சத பார்த்ததுண்டா??
குடும்ப கஷ்டத்துக்காக பிள்ளைய
வளக்கணும் னு வாய்க்கு
வந்த வார்த்தையால் வேலையில்
திட்டு வாங்கியதை கேள்வி பட்டதுண்டா??
உனை திட்ட பின்
அவர் புலம்பி மனதோடு
அழுவதை கேட்டதுண்டா??
இதையெல்லாம் நீ
தெரிந்துகொள் !
புரிந்துகொள் !
பகிர்ந்துகொள்!
பார்த்துக்கொள் !
கேட்டுக்கொள்!
பின்பு நீ அவரை பற்றி பிறரிடம்
திட்டி கொள்.. !!
ஒரு ருபாய் வாங்க
நீ ஓடி உழைக்கும் போது
தெரியும் அவர் செலவிட்ட
பத்து ரூபாயின் மதிப்பு !!
அவர் ஆண்மையின் ரகசியம்
நீ வேலையில் திட்டு வாங்கி
கோவத்தை உனக்குள் அடக்கும்
போது புரியும் !!
குடும்ப கஷ்டம் உன் தலையில் ஏறும்போதும்
அவரின் இழப்பின் போது
அருமை தெரியும்?!!!..
உன் அப்பாவின் அருமை தெரியும் !!..