கருவறை
கருவறை


இருட்டான அறை அது
இரு துளி சேர்ந்து எடை ஏறுது
கொடை வள்ளல் அது
கொடுக்க தொப்புள் கொடி உருவானது,
அன்பெனும் இரவல் வாங்கி
ரத்தம் உருவானதே கொடி
வழியாக இறங்கி,
ஒரு துளி வந்து பல
சேதி சொல்ல
சித்தம் உருவானதே
கை கழல் முளைத்ததே,
கொஞ்ச காலம் கொட்டமடிக்க
தொட்டி கட்டி தண்ணி
விட்டேதே நீச்சல் அடிக்க,
பட்டென்று கிழிந்து
வெளியே வந்தா
பகல் பளிச்சுனு வரவேற்குது மகிழ்ந்து...