சட்டை
சட்டை
சாலைகள் பல அலைந்து, அழகிய ஆடையை தேர்ந்தெடுத்தேன்
அன்றாடம் அணிய விருப்பமின்றி, அலமாரியில் கிடத்தினேன்
நாளை வரும் நல்ல பண்டிகை என்று நாட்களை கடத்தினேன்
அந்த பண்டிகை வந்தது, மனம் அலமாரியிடம் சென்றது
ஆணந்ததுடன் ஆடையை அணிய விழைந்தேன்
ஐயோ கொடுமை ஆடை சிறிதாகிவிட்டது, ஆத்திரத்தில் அலரினேன் ஆடையிடம்
அது அமைதியாய் சொன்னது, பெரிதாகிறவன் நீ என்று.
- முருகன்