மழை
மழை
உன்னை நினைத்து நான் ஏங்கும் போது பல
காத தூரத்தில் உன்னை வெறுக்கிறார்கள்
காரணம் நீ அங்கு அடை மழையாம்
மக்கள் பலர் உனக்கு பலி ஆகி விட்டார்களாம்
கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் சேதமாம்
ஆனால் இங்கு நீ உயிர் மூச்சு. மக்களுக்கு வாழ்வாதாரம் கொடுக்கும் தெய்வம்
விவசாயி உன் வருகைக்கு காத்து கொண்டு
தெய்வங்களை வேண்டி கொண்டு இருக்கிறான்
கொழுத்து போன மக்கள் காசை வீணடிக்க மலை
உச்சியை நாடுகிறார்கள்
அந்த உஷ்ணம் தாங்காமல் மேக வெடிப்பால் உன் கோபத்தை காட்டும் போது,தவறு யார் மீது...
நீயின்றி பயிர் வாடும் போது,உன்னை திட்டுகிறோம்
மேக வெடிப்பில் நீ கொட்டும் போதும் உன்னை
த
ிட்டுகிறோம்
நீ வர மறுக்கும் நாட்களில் தலையில் குடங்களுடன்
உன்னை ஏசும் நாங்கள்
நீ உன் தாராள மனதை திறந்து அருவியாய் கொட்ட,அந்த நீரை சேமித்து வைக்க, தவறி
விடுகிறோம்
நீ வராமல் போகும் நாட்களில் ஊர் ஊராக
கூட்டம் போட்டு மழை நீர் சேகரிப்பு பற்றி
முழக்கம் போடுகிறோம்.
நீ எங்களை மறப்பது இல்லை,நாங்கள் தான்
மறந்து எதற்கு இந்த மரம் என்று காட்டை அழிக்கிறோம்
நீ எந்த காலத்திலும் எங்களுக்கு பாடம் புகட்ட தவறியது இல்லை
ஆனால் எங்கள் அகந்தை பாடம் கற்க மறுக்கிறது
நீ ஒரு நாள் காணாமல் போகும் நாள் தூரமில்லை
அப்பவும் நாங்கள் திருந்த போவது இல்லை
எங்களை மன்னித்து விடு.....