குளிர்நிலவின் ஒ ளி/லி ப்பிளம்பு!
குளிர்நிலவின் ஒ ளி/லி ப்பிளம்பு!


டிசம்பர் 7, 2019
ஒரு நாள் இரவு..
பத்து டு பதினொன்று..
சென்னை வானொலி நிலையம்...
விவித பாரதியின் வர்த்தக ஒலிபரப்பு..
பண்பலையில் நீங்கள் கேட்டவை..
சுசீலா அம்மாவின் பாடல்கள்..
ஒரு நாள் இரவு.. பகல் போல் நிலவு..
மன்னவனே அழலாமா..
நானே வருவேன் இங்கும் அங்கும்..
பருவம் எனது பாடல்..
மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு..
நெஞ்சம் மறப்பதில்லை..
நாளை இந்த வேளை தன்னில்..
தேடினேன் வந்தது நாடினேன் தந்தது..
ஒரு நாள் யாரோ..
கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே..
சொன்னது நீதானா சொல் சொல் சொல்..
பார்த்த ஞாபகம் இல்லையோ..
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல…
மாலைப் பொழுதின் மயக்கத்திலே..
இது…
சுசீலா அம்மாவின் குரலா..
அந்தக் குரல் வழி வழியும்
சுத்தத் தேன் பெருக்கமா
சொக்கத் தங்க கரைசலா
மென் சந்தன வழிசலா
முக்கனி பிழிந்த சாரா
அமுதப் பெருக்கின் ஊற்றா
குளிர் நிலவின் ஒளி(லி)ப்பிளம்பா
இவை பாடல்களா தேனருவியா
ஆச்சரியமான அமுத கானமா
தென்றலில் தவழும் தேன் கிண்ணமா
ஒலி வடிவில் காதிலிறங்கும் தேனமுதமா!!!
நான் ஒருவரைப் பார்த்து
வியந்தேன் என்றால் அது
சுசீலா அம்மாதான்!
நான் சுசீலா அம்மாவைப் பார்த்து
வியந்த தருணம்
அமைதியான அந்த
இரவு மணி பதினொன்றுதான்!