STORYMIRROR

sowndari samarasam

Fantasy

4  

sowndari samarasam

Fantasy

தாய்மை

தாய்மை

1 min
171

இரு மனங்கள் கூடி தாளமிட்டு 

மனையேறி மாலையிட்டு மாங்கல்யம் ஏந்தி தை திங்களில் கோலமிட்டு 

மல்லிகை பூக்களால் அலங்கரித்த பெண்ணவள்..

நெடுங்காலமாய் 

தத்தி தவழ்ந்து 

கொஞ்சி மகிழ 

முத்தமிட்டு இரசித்து அழகு பார்க்க 

குழந்தை வேண்டி கோவில் 

குலமென்று தேடி திரிந்து தொட்டில்

 கட்டி வரம் வேண்டி கேட்டவள்

 மனம் நொந்து மற்றோரால் ஏளனம் 

செய்து மனம் புன்பட்டு நிற்கும் 

வேளையில் வழியிலோரு அன்புக்கு 

ஏங்கிய ஒரு குழந்தையை பார்த்தாள்..

பூ கூடையை கையிலேந்தி ஏக்கத்துடன் அவளையே உற்று பார்த்து நின்றிருந்தான்..

அன்பு வேண்டி ஆதரிக்க அந்த 

குழந்தையை கட்டி அணைத்த நொடியிலே பெண்ணவள் தாய்மை அடைகிறாள்..



Rate this content
Log in

Similar tamil poem from Fantasy