STORYMIRROR

KANNAN NATRAJAN

Others Children

5  

KANNAN NATRAJAN

Others Children

கொடி

கொடி

1 min
28

கொடி குத்திட்டு போடா!

எதற்கு? என்றான் ரிச்சர்ட்.

இன்று சுதந்திர நாள்.


இப்பல்லாம் பணம் வருகிற நாள் எதுன்னு பார்க்கிறதுதான் கௌரவம். 

நீ எதோ தவறான வழியில் பணம் சேர்க்கிறாய் என நினைக்கிறேன். அப்படி நீ இருக்கிறாய் எனத் தெரிந்தால் வீட்டிலேயெ சேர்க்கமாட்டேன்.


அப்பாவை அலட்சியப்படுத்திவிட்டு வண்டியில் காற்றாகப் பறந்தான் 

டிராஃபிக் சிக்னலில் வண்டி நின்றது. புக் விற்றுக் கொண்டிருந்த ஏழைச் சிறுவன் கொடி குத்தி இருந்தான்.


இவனிடமும் ஒன்றை நீட்டவே வாங்கிவிட்டு பணம் எவ்வளவு என்றான். என் தாய்நாட்டிற்காகத்தான் இது...பணம் வேண்டாம் என்று சொல்லிச் சென்ற சிறுவனின் உடை முழுவதும் கிழிந்திருந்தது.


ஆனால் அவன் உள்ளம் முழுவதும் பெருமிதத்தால் நிறைந்திருந்ததை ரிச்சர்ட் உணர்ந்தான். கொடியை சட்டையில் குத்தி வண்டியை உதைத்துக் கிளப்பினான்.


Rate this content
Log in