நினைவு கூறுவோம் நம் ஆசிரியர்களையே
நினைவு கூறுவோம் நம் ஆசிரியர்களையே
1 min
419
#ThankyouTeacher
ஆசிரியர் ! - தன்னலம் துளியும்
கலந்திட முடியாத
அன்பு மனம் !
ஆசானின் நடவடிக்கை -
அது அன்போ கண்டிப்பபோ
எதுவாயினும் - அங்கே
நிறைந்திருப்பது என்னவோ
அக்கறை ஒன்று மட்டுமே !
எண்ணமெல்லாம் மாணவர் தம்
நலனும் மேம்பாடுமே நிறைந்திருக்க
காலம் பல ஓடினாலும்
ஆசிரியரின் மனதில் காலமெல்லாம்
நிலைத்திருப்பது என்னவோ
மாணவரின் நல்வாழ்வு மட்டுமே !
நினைவு கூறுவோம் - நம்
நல்லாசிரியர்களையே -
நாம் வாழும் காலம் வரையே !