STORYMIRROR

Yamini Dinesh Kumar

Children Stories Classics Children

4  

Yamini Dinesh Kumar

Children Stories Classics Children

மழலை

மழலை

1 min
396

உன் எச்சில் குழப்பும் குமிழ் 

குமிழுள் காற்று நான் 

உன் கன்னம் தங்கச்சிமிழ் 

அதில் மிச்சம் நான் 


என்னை ரசிக்கும்

உன் இமைக்கா கருவிழி 

இந்த ஆழ்கடலாம் 

அமைதி 


என்னை சிலிர்க்கவைக்கும் 

உன் கண் இமை 

அந்த மயிலிறகாம் 

பூரிப்பு 


என்னை மட்டும் அறியும் 

உன் எண்ணம் 

இந்த உலகமாம் 

வியப்பு 


என்னை பற்றிக்கொள்ளும் 

உன் பிஞ்சு விரல்கள் 

அந்த மல்லிகையாம் 

அரவனைப்பு 


என்னை கூட்டத்தில் கண்டுகொள்ளும் 

உன் மனம் 

இந்த தொப்புள்கொடி உறவாம் 

பயிர்ப்பு

 

என்னை உதைக்கும் 

உன் பஞ்சு கால்கள் 

அந்த மல்யுத்தம் 

சிரிப்பு 


என்னை மாற்றிய சேய் நீ!

உன் தாயா நான்?

இந்த தாய்மை 

திகைப்பு 


Rate this content
Log in