STORYMIRROR

Yamini Dinesh Kumar

Drama Romance Classics

4  

Yamini Dinesh Kumar

Drama Romance Classics

மழைச்சாரல்

மழைச்சாரல்

1 min
305

மழைச்சாரல் 

இதுவே நம் காதல் 

அவர்களுக்கு நாம் 

கணவன் மனைவியாம் 


மண்ணை தீண்டும் முன்பே 

காற்றை தீண்டி போகும் 

மழைத்துளி சிறுதுளியாயினும் 

கண்களை உறைத்துவிடும் 


உன் பார்வை தீண்டும் முன்பே 

உன் ஸ்பரிசம் தீண்டி போகும் 

உன் தீண்டல் சிறிதாயினும் 

என் உடலை உறைத்துவிடும் 


வறண்டது பூமி 

சூழ்ந்தது கார்மேகம் 

தாக்கியது மின்னல் 

பெருகியது வெள்ளம் 


வறண்டது தேகம் 

சூழ்ந்தது மோகம் 

தாக்கியது வேகம் 

பெருகியது காதல் 


சேற்றுவயலோடு நாற்றுபோல 

மண்வாசம் மழைச்சாரல் 

எரிக்கரையோரம் 

ஈரப்பதம் மழைச்சாரல் 


சேற்றுவயலோடு நாற்றுபோல 

உன்சுவாசம் என் கைகளோடு 

ஏரிக்கரையோரம் 

ஈரப்பதம் கண்மீன்களோடு


Rate this content
Log in

Similar tamil poem from Drama