STORYMIRROR

Yamini Dinesh Kumar

Drama Romance Classics

4  

Yamini Dinesh Kumar

Drama Romance Classics

மணவினை

மணவினை

1 min
325

மணவினை 

நம் மனங்களின் வினை 

இருவரி கேள்வி 

ஈரவிழிகளில் விடை 


என் மனம் 

நீ அறிவாய் 

உன் மனம் 

நான் அறியேன் 


மனவினை 

நம் சமமற்ற பரிமாற்றம் 

அதில் நீ கண்ட ஏமாற்றம் 

காலம் போக என்னை மாற்றும் 


குற்ற அறிக்கை 

எனினும் அது நீ அளித்தது 

என்னை தாக்கியது 

என்னை மாற்றியது 


உன்னை அறிந்ததாய் 

என்னால் பெருமிதம் கொள்ள 

முடியவில்லை முழுதாய் 

இது காதலல்ல 


என்று புரியும் 

இந்த புரிதல் 

புரிந்தால் போதுமே 

மெய்மறவேனே


எலியும் பூனையும் 

அடித்து கொண்டதை

ஒருநாளும் கண்டதில்லை 

உன்னுடன் சண்டையிடும்வரை


பலமுறை வியந்ததுண்டு

இரு இமைகளை கண்டு

சிறுபிள்ளைகள் போல் 

நாம் கூடிக்கொள்ளும் வரை


என் உலகம்

நீயென உணர 

பல கோடி ஊடல் 

போதவில்லையே


உன் உலகில் 

நான் யார்?

மொய்க்கும் வண்டோ? 

இயக்கும் பொருளோ?


திகட்டாத இனிப்பு

இருட்டிடாத இரவு

கசந்திடாத உறவு

நீ, நான், நாம்!


Rate this content
Log in

Similar tamil poem from Drama