உண்மையா?
உண்மையா?
உன்னை தொட்டு தொட்டு பார்க்கிறேன்,
நீ என்னருகில் நிற்பது உண்மையா என்று?
எந்தன் கன்னத்தை கிள்ளி உண்மை என்று சொன்னாய்,
என்னை கிள்ளி கிள்ளி பார்க்கிறேன்,
நீ என்னிடம் பேசுவது உண்மையா என்று?
என்னை செல்லமாக கடித்து உண்மை என்று சொன்னாய்,
நீ என்னை கடித்தது உண்மையா என்று
நான் விழிக்கையிலே,
உந்தன் அன்பான அணைப்பு சொல்லியது,
எந்தன் மனதுக்கும் மூளைக்கும் உறைக்கும் அளவிற்கு,
உண்மைதான் என்று......