STORYMIRROR

Shakthi Shri K B

Drama Classics Fantasy

5  

Shakthi Shri K B

Drama Classics Fantasy

பறக்க ஆசை

பறக்க ஆசை

1 min
480

என் தோட்டத்தின் அழகிய மலர்களில் வந்து அமரும் சிறு ஜீவனே,

உன்னை பார்த்தவுடேனே மனதில் ஒரு உற்சாகம் வந்தது,

நீ பறப்பதை பார்த்து என் மனமும் வானுயர்ந்து பறந்தது.


உன்னை பற்றி எண்ணுகையில் என் மனம் நிறைய மாறுதல்கள் அடைகிறது,

உன்னை போல பறக்க ஆசை என் மனதில் தோன்றுகிறது,

உன்னை போல என்றும் சுறுசுறுப்பாக இருக்க ஆர்வம் ஆயிரம் என்னக்கு.


நீ வந்த இரண்டு நாட்களில் உன் மீது என்னக்கு அன்பு அதிகம்,

உன்னை போல உன் நண்பர்கள் பலர் என் தோட்டத்தை சுற்றி வந்தாலும்,

உன் மஞ்சள் நிற இறக்கைகள் உன்னை மட்டும் என்னக்கு அடையாளம் காட்டும்.


உன்னை நான் ஒரு நாள் பார்க்காவிடில் என் மனம் சொர்ந்துபோகும்,

நான், உன்னை பேணி காக்கவில்லை என்ற போதும்,

என் தோட்டத்திற்கு நீ வருவதை நிறுத்தவில்லை.


உன்னை போல ஒரு அன்பு செல்லப்பிராணி நான் வளர்க்கவில்லை என்றபோதும்,

நீயே எனது செல்லப்பிராணி; இன்று என் இறுதி மூச்சி நிற்கும் தருவாயில் நான் உள்ளேன்,

இந்த கிழட்டு நண்பனை பறக்க கடைசி முறையாக நீ வருவையா? என காத்துறிக்கிறேன்.


என் சுவாசம் குறைவதை நான் உணர்கிறேன், என் குடும்பமே என்னை சூழ்ந்து உள்ளார்கள்,

இருப்பினும் உன்னுடைய கடைசி சந்திப்பிற்காக காத்து கிடந்துளேன் நானே,

ஏதோ ஒரு சத்தம், அதை முன்பே கேட்டுளேன் நான், ஆமாம், நீ வந்து விட்டாயா,


என் தோட்டத்தில் வளம் வரும் பறவைகளில் நீ மிக அழகிய பறவை,

நான் உன்னை வளர்த்ததில்லை என்றபோதும் என்னை காண வந்த நீயே, என் செல்லப்பிராணி.

இனி உன்னை போல நானும் பறக்க ஆசை கொண்டு பறக்க போகிறேன் சில நொடிகளில்



Rate this content
Log in

Similar tamil poem from Drama