STORYMIRROR

Yuvaraj KR

Abstract

4  

Yuvaraj KR

Abstract

அவரும் ஒரு கவிஞர்

அவரும் ஒரு கவிஞர்

1 min
332


புதிய நண்பர். 

அவரும் ஒரு கவிஞர் என்றார் 

நானும் கவிதைகள் எழுதுவேன் என்றேன் 


மகிழ்ச்சி.

என் கவிதைகளை சொல்ல எத்தனித்தேன் 

இவருக்குத்தான் என் கவிதைகளை ரசிக்க முடியும் என நினைத்தேன் 


இல்லை .

நான் பாராட்டிற்கு அலைகிறேனோ 

குறை கண்டுபிடித்து விடுவாரோ 


சரி .

அவராய் கேட்கட்டும் சொல்லலாம் 

அவர் கொடுத்து வைத்திருந்தால் - என நினைத்தேன் 


கை குலுக்கினேன் 

விடைபெற்றேன். . .


இறுதிவரையிலும் அவர் கவிதைகளை படிக்க நான் நினைக்கவே இல்லை !



Rate this content
Log in

Similar tamil poem from Abstract