பயணம்
பயணம்
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
நடக்காத பாதைகள்
நடந்த பாதங்கள்
அறியாத மனிதர்கள்
அறிந்த புன்னகைகள்
விளங்காத மொழிகள்
விளங்கிய உணர்வுகள்
சுவைக்காத உணவுகள்
சுவைத்த சுவைகள்
காணாத காட்சிகள்
கண்ட மூலக்கூறுகள்
உடுத்தாத உடைகள்
உடுத்திய தன்மானங்கள் <
/p>
கேட்காத வரலாறுகள்
கேட்ட அழுகுரல்கள்
கற்பிக்காத கடவுள்கள்
கற்பித்த நம்பிக்கைகள்
பழகாத நவீனங்கள்
பழகிய நடைமுறைகள்
உணராத ஒருமையை
உணர்த்தும் பயணங்கள்
பயணிக்காத உடல்கள்
பயணிக்கும் கல்லறைகள்
ஆதலால் மானிடா
பயணம் செய்!