STORYMIRROR

Raju Arockiasamy

Others

4  

Raju Arockiasamy

Others

தன்முனைக் கவிதைகள் 1

தன்முனைக் கவிதைகள் 1

1 min
328


1

யாரையும் நான்

போலி செய்வதில்லை

எண்ணிலக்கணங்கள் போதும்

நான் இலக்கியமாக


2

மௌனங்களை முகமூடிகளாய்

அணிந்திருக்கிறோம் நாம்

நத்தையாய் ஊர்கிறது

நம்மிடையே நேரம்


3

உன் கேள்விகளின் வெம்மை

என் பதில்களைச் சுடுகின்றன

வாழ்வைத் தொலைக்கும் நான்

சாம்பலில் கவிதை செய்கிறேன்


4

ஒரே மிடறாகத்தான்

குடித்திட பேராசை

உன்கண்களில் வழியும்

காதல் மொத்தத்தையும்


5

என் கவிதைப் புத்தகத்தில்

சில வெற்றுப் பக்கங்கள்

என்றாவது உன் அன்பை 

கவிதை ஆக்கிடும் நம்பிக்கையில்



Rate this content
Log in