STORYMIRROR

KANNAN NATRAJAN

Classics Inspirational Others

4  

KANNAN NATRAJAN

Classics Inspirational Others

ஓவியம்

ஓவியம்

1 min
25

ஓவியம் ஒருவரின்

மனதைக் காட்டும்

மனதத்துவக் கண்ணாடி!

மரபுவழி வித்தைகளை

பிரதிபலித்துக் காட்டும்!

இனவழி தோன்றல்களின்

கிறுக்கல்களில்கூட

மரபுக் கீற்று பிறந்த இடத்தின்

மகிமையைக் கொடுக்கும்!

மொழி வெளிப்படுத்தும்

முதல் மொழிதான்

கிறுக்கல் பாறை ஓவியங்கள்!

மனித மனங்கள்கூட

சமயத்தில் பாறை ஓவியங்களாய்

பணபலத்தில் கல்லாக 

மௌனமாக அமர்ந்துவிடும்!

வீசுகின்ற தமிழ் காற்றில்

ஆசிரியர் கற்றுக் கொடுத்த

பாடம் சன்னலில் கூரைவீட்டில்

மரங்களாய் நேர்மையாக நட

என உற்சாகமாய் கூச்சலிட்டது!



Rate this content
Log in

Similar tamil poem from Classics