இயற்கை அன்னை
இயற்கை அன்னை
இன்று இருப்பார் நாளை இல்லை எனும் பெருமை உடைத்து இவ்வுலகு; ஆண்டாண்டு அழுதாலும் மாண்டார் வருவாரோ என்றெல்லாம் எழுதிச்சென்றனர் மகாகவிகள்.
நிலையாமை என்பதும் நிலையானதல்ல என இயற்கை அன்னை பகிர்ந்திட்டாள்.
பல்லுயிரையும் இவ்வுலகில் பாங்காய் நிலை பெறச் செய்திட்டாள் இயற்கை அன்னை.
புல்லாகி, பூண்டாகி, செடியாகி, மரமாகி, சிற்றெறும்பாகி, சிலந்தியாகி, வல்விலங்காகி, மானிட உருக்கொண்டு உலவி வர வாழ்வியல் கற்றுக் கொடுத்தாள் இயற்கை அன்னை.
தத்தம் அன்னை மறைந்தாலும்
அனாதை என்ற சொல் அழித்திடவே
தன்னுயிர் போல் அனைத்துயிரும் காத்து நிற்கின்றாள் இயற்கை அன்னை!
