தாய் தந்தை பந்தம்
தாய் தந்தை பந்தம்
நீண்டு நெடுதுயர்ந்த மரம் தந்தையாம் ...
அதன் மேல் பின்னிப் பிணைந்த கொடி தாயாம். இயற்கையால் இணைந்த இன்பத்தால்
பூத்து மலர்ந்தன பூக்கள் எனும் மழலைகள்
வண்ண மலர்கள் எனும் மழலைகளைப் பார்த்து பூரித்தாள் கொடித்தாய். மாலை வந்தது; வண்ணமலர்கள் வாடின; வாடிய மழலைகளைக் கண்டு பனித்துளிகளாய் கண்ணீர் சிந்தினால் கொடித்தாய் கம்பீரமாய் நின்ற மரத்தந்தையோ கவலைப்படாதே குழந்தைப் பருவம் குறுகிய பருவம் கவலைப்படாதே என ஆறுதல் கூற களிப்பாய்க் காய்கள் என தன் மழலைகள் வளர்வதை கண்டு கவலை மறந்தால் கொடித்தாய்
