இயற்கையின் பிச்சை
இயற்கையின் பிச்சை
புருவங்களாக மேகங்கள்,
பொட்டாக நிலா,
கரு வானமே முகமாக,
நட்சத்திரங்கள் அணிகலன்களாக,
ஆம் இயற்கை ஓர் அழகிய பெண்!
அவள் கண்ணீரே மழை,
அவள் புன்னகையே மின்னல்,
பூமிக்கு உயிர் பிச்சை போட்டவள் அவளே!
மின்னத்தான் செய்வாள் அல்லவா?
