பறவைகள் பல விதம்
பறவைகள் பல விதம்
என் வீட்டின் அருகினிலே ஓர் நெடிந்துயர்ந்த வேப்பமரம்
குனிந்து எட்டிப் பார்த்தன என் பால்கனியை
காலையில் ஒரு காகம் வந்தது
கண்டதும் நானும் உணவு வைத்தேன்
களிப்போடு உண்டு பறந்து போனது.
கீச் கீச் என குரல் எடுத்து வந்தது பச்சைக்கிளி
பச்சைநிற கிளைகளில் ஊஞ்சல் ஆடிப் பறந்தது.
இங்கே பாருங்கள் ஒரு ஜோடி!
ஆண் பெண் குயில்கள் இரண்டும் வந்து
அங்கே இங்கே என ஓர் கூண்டைத் தேடின.
கூண்டு கிடைக்காமல் ஏமாந்து பறந்தன.
அங்கே பாருங்கள் ஒரு மீன்கொத்தி!
அழகான நீல மஞ்சள் வண்ணத்தில்
அருகில் உள்ள ஏரியில் பாய்ந்து மீன் பிடித்த
களைப்பு நீங்க வந்து அமர்ந்து பறந்தது.
உச்சி வெயில் நேரம்தான் என்றாலும் நாங்கள் வருவோம் மீதி உணவை உண்ண என்று
புறாவுடன் குருவிகள் பறந்து பறந்து வந்தன,
பெரிய குருவிகள் உண்டன; சிட்டுக்குருவிகள் உண்டன;
அனைத்தும் மகிழ்ந்து உண்டு பறந்தன.
சாயுங்காலம் தனிலே பறந்து வந்ததோர் பறவை
உற்று நோக்கினேன் அது நாரை வேப்பமரத்தடியின் புதருக்குள் சென்றது
வெளியே வரும்போது அதன் பின்னே
தத்தித்தத்தி வந்தது அதன் குஞ்சு
எப்படி பறக்க வேண்டும் என்றும் எங்கே தங்க வேண்டும் என்றும்
குஞ்சுக்கு பாடம் கற்பித்து பறந்தது நாரை.
காலை முதல் மாலை வரை
கண்டு களிப்புற்றேன்
இப்பறவைகள் பலவிதம்.
