நல்வாக்கு கூறுதல்
நல்வாக்கு கூறுதல்
நல்லகாலம் பிறக்கிறது! நல்லகாலம் பிறக்கிறது!
சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகிறது! பிறகு சமூக நீதிச் சிந்தனையாளர்களால் ஒற்றுமை ஏற்பட்டு நல்லகாலம் பிறக்கிறது!
வாழும் இடங்களில் எல்லாம் சண்டைகள் தோன்றிச் சமாதானம் ஏற்படுகிறது! அதனால் நல்லகாலம் பிறக்கிறது!
மக்களிடையே அன்னிய சக்திகள் பிரிவினைச் சிந்தனைகளைத் தூண்டிக் கலகம் விளைவிக்கின்றன! அதனால் கலகம் பிறக்கிறது! பிறகு சமூக நீதி அறிஞர்களால் ஒற்றுமை ஏற்படுத்தப் படுகிறது! பிறகு நல்லகாலம் பிறக்கிறது!
சாதிகள் பல ஒற்றுமையுடன் ஒன்றுசேர்கின்றன! அதனால் நல்லகாலம் பிறக்கிறது!
கல்வியில் சிறந்த சமூகத்தினால் வேற்றுமைகள் மறைகிறது! அதனால் நல்லகாலம் பிறக்கிறது!
வேதங்களில் உள்ள நல்ல கருத்துகள் மட்டும் ஏற்றுக்கொள்ளப் படுகின்றது! அதனால் நல்லகாலம் பிறக்கிறது!
வேதங்களில் உள்ள சமூக நீதிக்கு எதிரான கருத்துக்கள் சமூக நீதிச் சிந்தனையாளர்களால் புறக்கணிக்கப்படுகின்றது! அதனால் நல்லகாலம் பிறக்கிறது!
வேதங்களில் பெண்களுக்கு எதிராக எழுதப்பட்ட கருத்துக்களுக்கு எதிராகப் புரட்சி சிந்தனைகள் தோன்றுகிறது! அதனால் நல்லகாலம் பிறக்கிறது!
வேதங்களில் காணப்படும் எளிய மக்களுக்கு எதிரான கருத்துக்கள் தூக்கி எரியப்படுகிறது! அதனால் நல்லகாலம் பிறக்கிறது!
எளிய மக்களிடையே இருக்கும் கல்லாமை மற்றும் அறியாமை ஒழிக்கப் படுகிறது! அதனால் நல்லகாலம் பிறக்கிறது!
எளிய மக்களின் கல்வியறிவினால் அரசு மற்றும் தனியார்த் துறைகளில் பணி புரிந்திட வாய்ப்பு கிடைக்கிறது!அதனால் நல்லகாலம் பிறக்கிறது!
சமூக நீதிக் கருத்துக்களினால் எளிய மக்களுக்கும் பெண்களுக்கும் கல்வி உரிமை கிடைக்கிறது! அதனால் நல்லகாலம் பிறக்கிறது!
சமூக நீதிக் கருத்துகளினால் உடன் கட்டை ஏறும் பழக்கத்தினை ஒழித்தாயிற்று! அதனால் நல்லகாலம் பிறக்கிறது!
கணவனை இழந்த பெண்களைத் தனிமைப் படுத்தும் பழக்கத்தினை ஒழித்தாயிற்று! கணவனை இழந்த பெண்களுக்கு மறுமணம் செய்து கொடுக்கும் மனப் பக்குவம் உண்டாயிற்று! அதனால் நல்லகாலம் பிறக்கிறது!
தொழு நோயினை ஒழித்து அவர்களைப் பொதுமக்களுடன் இனைந்து வாழ்வினை உண்டாக்கியாயிற்று! அதனால் நல்லகாலம் பிறக்கிறது!
கைவண்டி இழுக்கும் தொழிலை ஒழித்து அதற்கு மாற்றாக மிதிவண்டித் தொழிலினை உண்டாக்கியாயிற்று! அதனால் நல்லகாலம் பிறக்கிறது!
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சர்வதேச அளவிலான தொழிற்சாலைக் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தியாயிற்று!சர்வதேச அளவிலான போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தியாயிற்று! அதனால் நல்லகாலம் பிறக்கிறது!
தமிழகத்தில் அனைவருக்கும் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கச் சட்டங்கள் அமல்படுத்தியாயிற்று! அதனால் நல்லகாலம் பிறக்கிறது!
தமிழகத்தில் குழந்தை தொழிலாளர் முறையினை ஒழித்தாயிற்று! அதனால் நல்லகாலம் பிறக்கிறது!
தமிழக அளவில் எளிய மக்களுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் இலவசக் கல்வியும் இலவச மருத்துவமும் அளிக்கப்படுகிறது! அதனால் நல்லகாலம் பிறக்கிறது!
தமிழக மக்களும் தமிழ் மொழியுடன் இணைந்து ஆங்கிலமும் அயல் நாட்டு மொழிகளையும் கற்றுக் கொண்டாயிற்று!தமிழர்கள் அனைத்து நாடுகளிலிருந்தும் பொருள் ஈட்டித் தாய் நாட்டிற்குப் பெருமளவில் அன்னியச் செலாவணிக் கொடுத்தாயிற்று! அதனால் நல்லகாலம் பிறக்கிறது!
தமிழக மாநிலம் அனைத்துத் துறைகளிலும் இந்திய அளவில் தலை சிறந்த மாநிலமாக உருவெடுத்தாயிற்று! அதனால் நல்லகாலம் பிறக்கிறது!
தமிழகத்தில் சாதிகளையும் மற்றும் மதங்களையும் தூக்கி எரிந்தாயிற்று! அதனால் நல்லகாலம் பிறக்கிறது!
சமூக நீதிக் கருத்துக்களினால் அமைதியையும் அறிவாற்றலையும் வீரமும் கிடைக்கிறது! அதனால் நல்லகாலம் பிறக்கிறது!
நல்லவைக் கிடைக்கிறது! நல்லவைக் கிடைக்கிறது! அதனால் நல்லகாலம் பிறக்கிறது!
