சோறு
சோறு


உன் வருகைக்காய் காத்திருக்கும் நிமிடங்களும்
யுகங்களாய்க் கழியுதடி,
உனக்காய் ஓவ்வொரு நொடியும்
இதயம் ஏங்கித் தவிக்குதடி,
எனை நோக்கி நீ வந்த பொழுதினிலே
பிறவிப்பயன் அடைந்ததை உணர்ந்தேனடி,
என் தவிப்பறியாமல் எனைத் தாண்டி மற்றவனிடம் நீ செல்ல
பற்ற வைத்த சருகாய் நெஞ்சம் எரியுதடி..
இப்படிக்கு, உன(ணவு)க்காக ஓட்டலில் காத்திருப்போர் சங்கம்!!