நட்பெனும் அழகிய கனாக்காலம்!!
நட்பெனும் அழகிய கனாக்காலம்!!


அது ஒரு பொற்காலம்..
பொறுப்புகளும் கடமைகளும் நம்மைப் பிரிப்பதற்கு முந்தய காலம்..
நினைத்தபோதெல்லாம் மிதிவண்டி மிதித்து உன்னைப் பார்க்கக் கிளம்பிய காலம்..
தினம் தினம் கதைகள் பேசிச் சிரித்த காலம்..
கவலையின்றி ஊர் முழுக்கச் சுற்றி வந்த காலம்..
திண்ணையில் அமர்ந்து கேலிகள் பேசிய காலம்..
பகலை இருளாக்கித் திகில் படங்கள் பார்த்த காலம்..
பண்டிகை நாட்களில் கூடி உண்ட காலம்..
எப்பொழுதும் நீ என் மனதில் இருந்தாலும் ஏங்குகிறேன் - தோழியே,
முப்பொழுதும் ஒன்றாய்த் துள்ளித் திரிந்த அந்த நட்பெனும் அழகிய கனாக்காலம் மீண்டும் வாராதா என்று..!!