அவர்கள் சுட்ட தோசை
அவர்கள் சுட்ட தோசை
அப்பா சுட்ட தோசை,
தோசைக்கல்லில் சுட்ட
இட்லியைப் போல்
உப்பி இருந்தது.,
அக்கா சுட்ட
தோசையை மடித்து விட்டால்,
பல காலங்கள் கடந்து
சேர்ந்த காதலர்கள்
கட்டி அணைத்து கொண்டது போல்
பிரிக்க முடியாததாய் இருந்தது.,
தம்பி சுட்ட தோசையின் முனை,
சாணம் பிடித்த
கத்தியைப் போல்
கூராக இருந்தது.,
அம்மா சுட்ட
தோசையின் இரு பக்கம்,
செக்கச்சிவந்த வானம் போல்
செம்மையாக இருந்தது..
