உதட்டுச் சாயம்
உதட்டுச் சாயம்
பல வண்ண உதட்டுச் சாயங்களைப் பூசி
"நல்லா இருக்கா, இது நல்லா இருக்கா" என கேட்டுக் கொண்டிருந்தாய்..
நானும் எல்லா வண்ணத்திற்கும் ஒரே பதிலாய் "நல்லா இருக்கு" என சொல்லிக் கொண்டிருந்தேன்..
கடுங் கோபமானவளாய்..இனிமே என்னுடன் எது வாங்கவும் கூட வராதே என்று சொல்லி வீடு திரும்பினாய்..
அடிப்போடி, 🤣🤣
இயற்கையாகவே மின்னும் உன் இதழ்களை ஓயாமல் ரசித்துக் கொண்டிருப்பவனுக்கு,
நீ சாயம் பூசினால் என்ன பூசாவிட்டால் என்ன..!!

