Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Harry Krish

Tragedy Classics Fantasy

3  

Harry Krish

Tragedy Classics Fantasy

அவ்வப்போது சில முரண்கள்

அவ்வப்போது சில முரண்கள்

1 min
240


ஓராண்டுக்குப் பின் இளைத்துப் போய் ஊருக்கு வரும் பிள்ளைக்கு பழைய அளவிலேயே புதிதாய் 4 சட்டை எடுத்து வைத்துவிட்டாள் அம்மா..

#பழையதுபுதியது


காதலித்தவனை கரம் பிடித்து ரெஜிஸ்டர் மேரேஜ் செய்ய ஆயத்தமாகிக் கொண்டிருந்த பெண்ணுக்கு , அவள் ஜாதியிலேயே பெரிய இடத்தில் மாப்பிள்ளை பார்த்து அவள் எதிர்கால வாழ்வை எண்ணி கனவில் மிதந்துகொண்டிருந்தார் அப்பா..

#கனவுநிஜம்



பேச்சுத்துணையே இல்லாதிருந்த பிச்சைக்கார தாத்தாவிற்கு புதிதாய் எங்கிருந்தோ வந்து துணையாய் இணைந்தார் அந்த மௌனச் சாமியார்..

#மௌனம்சலனம்




ஆன்லைன் வகுப்பை முடித்து பெருமூச்சு விட்டு லேப்டாப் மூடி தன் மேலே வைத்த மாணவனை மூச்சுத்திணறியபடி வெறித்துக் கொண்டிருந்தது உபயோகிக்காத நோட்டுப்புத்தகம்..

#ஏக்கம்நிம்மதி









Rate this content
Log in

Similar tamil poem from Tragedy