STORYMIRROR

Harry Krish

Romance

3  

Harry Krish

Romance

நீ அருந்திச்சென்ற தேநீர் கப்

நீ அருந்திச்சென்ற தேநீர் கப்

1 min
205

நீ அருந்திச்சென்ற தேநீர் கோப்பையை

அப்படியே பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன்..


அதன் வாய்ப்பகுதி எனைப்பார்த்து ஏளனம் செய்ய, ஏன் சிரிக்கிறாய் என்றேன்...


அவள் உனைப் போல் என்னை ஏங்க விடவில்லை..

எனைக் கண்டாள்.. நான் ஒரேயொரு ஏக்கப் பெருமூச்சு விட்டேன்..

என் வாசத்தில் மயங்கி என் வாயோடு வாய் பதித்திட்டாள் என்று மறுபடிச் சிரித்தது..


என்ன ஆணவம்..தடயம் இருந்தால் தானே இது சிரிக்குமென,


கோப்பை வாயினில் உன் உதட்டின் தடம் உருத்தெரியாமல் போகும் அளவுக்கு என் வாய் பதித்து அழித்து விட்டேன்..


ஹாஹாஹா, இருவரும் சேர்ந்து என்னையா ஏங்க வைக்கிறீர்கள்...நான் நினைத்ததை சாதிப்பவன்... சாதித்து விட்டேன்..!!



Rate this content
Log in

Similar tamil poem from Romance