STORYMIRROR

Harry Krish

Romance Tragedy

3  

Harry Krish

Romance Tragedy

உனக்குத் தெரியும் சகி

உனக்குத் தெரியும் சகி

1 min
230

உனக்குத் தெரியும் சகி,

உன் மீது ஏற்கனவே என் காதல் தொடங்கிவிட்டதென்று..


நம் உரையாடல்கள் முடிவது நான் விரும்பாததை நீ கவனிக்கலாம்..


நான் பேசும் வார்த்தைகளெல்லாம் மறைமுகமாய் உன்னிடம் என் விருப்பம் சொல்லி, பதில் கேட்க முயல்வதை நீ காணலாம்.


நம் "சேட் விண்டோக்களில்" இப்போதெல்லாம் சிவப்பு இதயம் தாங்கிய பொம்மைகள் அதிகம் ஆக்கிரமித்திருப்பதை நீ கவனித்திருக்கலாம்..


யாரோ ஒருத்திக்கென சொல்லி, ஏகப்பட்ட காதல் கவிதைகள் எழுதுகிறேன்..நீ அதை படித்திருக்கலாம்..


உனைக் காண்பதற்கான சந்தர்ப்பங்களை நான் வேண்டுமென்றே உருவாக்குவதை நீ உணரலாம்...


ஆனால் நீ இரக்கமற்றவள்..


சந்தித்து காந்தப் பார்வை வீசி என் ஆவல் தூண்டுகிறாய்..


ஒரு புன்னகைப் பொறி தட்டி, கொதித்து எழும்ப தயாராயிருக்கும் எரிமலையை

சீண்டுகிறாய்..


இதயம் சுமந்து வரும் பொம்மைகளுக்கு

அர்த்தம் புரிந்தும், அவற்றை அனுமதித்து எனைக் குழப்பி மகிழ்கிறாய்..


எத்தனை பேர் இருப்பினும் எனக்கான இடம் தந்து என் மதியை போதையாக்குகிறாய்..


அரிதாரம் பல பூசி அழகுச்சிலையாய் நின்று,

என் சாத்திரம் அனைத்தையும் உடைத்துனை

ஆட்கொள்ளும் வேட்கையை அதிகரிக்கிறாய்..!


கருணை கொள்..இல்லை என் துணை இழக்க துணிந்து கொள்..!!

ஏனென்றால்..,

உனக்குத் தெரியும் சகி,

உன் மீது ஏற்கனவே என் காதல் தொடங்கிவிட்டதென்று..!



Rate this content
Log in

Similar tamil poem from Romance