கவிதை
கவிதை


கவிதையே!
பாடலாக நீ மாறி
இதயத்தைத் தைப்பதால்
நீ கவிதையாக அகராதியில்
இடம்பிடித்தாயோ!
கவிதையே! உன்னால்
எல்லாம் சாதிக்க முடியும்
என்றே தினமும்
உன்னுடன் சுவாசித்து
வாழ்கின்றேன்!
உலக மக்கள் நன்மைக்காக
அமைதிப் புறாக்களாய்
புவியெங்கும் வீசி
வர கவிப் புயல்களாய்
மாறாமல் புத்தரின்
அன்புப் புன்னகை
கவிகளாய் ஒளி வீசி
செல்வாயோ!
மொழிகள் மாறுபட்டாலும்
எல்லையில் பாதுகாக்கும்
மனிதர்களுக்கும் குடும்பம்
பாசம் என்பது உண்டல்லவா!
எல்லை காப்பதற்காக
ரத்தம் சிந்துவது சரியாகுமோ!
கவிதையே!
மின்னி மறைகின்ற
மானிட வாழ்க்கையில்
அன்பு மட்டும்தானே
கொண்டு வாழ்ந்ததால்
தெரசாவால் அகிலத்தை ஆள
முடிந்தது!
கற்பீரவல்லி இலையாய்
மண்ணில் நடப்பட்டிருந்தாலும்
அப்பாவி இலைமேல்
எச்சில் உமிழும் அறியாமை
தொலைய கவிதையே!
தெரசாவின் மனப் பக்குவத்தை
எனக்கு நீ தர மாட்டாயா!
அறிவுக் கூர் தீட்ட
நூலக அலமாரியெங்கும் புத்தகம் தேட
எங்கும் வழி தெரியவில்லை!
அன்பை வெளிக்காட்டி
வந்துவிட்டாயா எனக் கேட்கும்
தெய்வங்களைச் சந்தித்து முறையிடும்
வழியும் தெரியவில்லை!
முட்டாள் மனிதனின் பாலியல்
வன்முறை கொடுமைக்கு சட்டம்
கொண்டு வர கவிதையே!
நீ வழி செய்வாயா!