புத்தகம்
புத்தகம்


நூலகங்கள் கதவு
மூடிய நிலையில்
அலமாரியில் அடுக்கப்பட்ட
நான் கறையான்களுடனும்
சிலந்தி வலைப்பின்னல்களுடனும்
கொரானா உபயத்தில்
பேசிக்கொண்டிருக்கிறேன்!
மின்நூலாய் இருந்திருந்தால்
இந்நேரம் அறிவற்ற கொரானாவிற்கு
மருந்தொன்று சொல்லி இருப்பேன்!
இறைவனால் படைக்கப்பட்ட
ஐம்பூதங்களை மதியாமல்
அவமதித்த வினைதான் என்றே
ஓரறிவுமுதல் ஐந்தறிவு உயிர்வரை
முகமூடி இல்லாமல்
வாழ்ந்து கொண்டிருக்க
பாரடா மனித வாழ்வை!
என்றே சித்தர் புராணங்கள்
புத்தகங்களாய் சிரித்ததை
யாரும் படிப்பாரின்றி
கறையானும் உணவுக்காக
அலமாரித்தட்டில்
அடுக்கியதோ!
வருங்கால இளந்தலைமுறை மரத்தில்
கூடு கட்டும் தூக்கணாங்குருவி
எழுத்து பறவைகள்
அறிவு விளக்கு வேண்டி
நூலக சன்னலில்
கதவு திறக்கும் நாளை
எதிர்பார்த்து காத்திருக்கின்றன!