STORYMIRROR

Uma Kannan

Classics Others Children

5  

Uma Kannan

Classics Others Children

அன்பே அறமே

அன்பே அறமே

1 min
518

தாலேலோ தாலேலோ

அன்பே அழகே தாலேலோ

அறிவே அறமே தாலேலோ

தாலேலோ தாலேலோ


வானவில்லின் வண்ணமாய்

வீசும் தென்றலின் வேகமாய்

மழைக் காற்றின் சுவாசமாய்

வந்தாயடா அழகாய் தாலேலோ 

                                (தாலேலோ)


தேனின் இன்ப சுவையுமாய்

குயிலின் இனிய பாட்டுமாய்

எனது புதிய உலகமாய்

வந்தாயடா இனிதாய் தாலேலோ

                                (தாலேலோ)

                     

முத்துச் சரங்கள் போலவே

கட்டித் தங்கம் போலவே

வைரக் கல்லை போலவே

வந்தாய் எந்தன் நிலவே தாலேலோ

                                (தாலேலோ)


ஆற்றில் வரும் நீரைப் போல்

காற்றில் வரும் சாரல் போல்

ஊற்றில் வரும் ஓசைப் போல்

வந்தாயடா புதிதாய் தாலேலோ

                                (தாலேலோ)


யாழில் எழும் நாதம் போல்

குழலில் எழும் கீதம் போல்

மழலை மொழியாளனாய்

வந்தாய் எந்தன் இசையாய் தாலேலோ


தாலேலோ தாலேலோ

அன்பே அழகே தாலேலோ

அறிவே அறமே தாலேலோ

தாலேலோ தாலேலோ


Rate this content
Log in

More tamil poem from Uma Kannan

Similar tamil poem from Classics