சீறிய சிங்காரநகரம்
சீறிய சிங்காரநகரம்


தலைநிமிர்ந்து நின்ற தலைநகரம்
நிலை குலைந்து போனதேனோ ?
அந்நியன் தன் வளம்தனை சுரண்டிடினும்,
ஆங்கிலேயன் தன் மக்கள்தனை அடிமைபடுத்திடினும்
சற்றும் துவண்டுபோகாது விடுதலை நோக்கி
முன்னேறிய எங்கள் மதராசப்பட்டிணமே !
சிங்காரமாக ஒய்யாரமாக நீயே உன்னை
அழகு படுத்திக்கொண்டாய் !
எல்லோரும் முன்னேற்ற பாதையிலே,
பொற்காலத்திலே, பரபரப்பாக சுற்றிகொண்டிருந்த தருணத்திலே,
கடலின் சீற்றத்திலே சிக்கிக்கொண்டாய் !
தளராது மீண்டாய், மாண்ட அனைவரும்
ஏக்கம் கொள்ளும் நிலைக்கு உயர்ந்தாய் !
வெற்றிடம் கூட வெளிநாட்டுச் சந்தைக்கு போட்டி போடும் நிலை !
ஏரி எல்லாம் மலையேறி போச்சு !
குளம் எல்லாம் குடியேற ஆகிடிச்சு !
மனிதன் மனிதனை பார்க்காமலே,
பேசிக்கொண்டும் உறவாடிக்கொள்ளும்
தருணமும் வந்தாச்சு !
அறிவியல் விந்தையில் மனிதனின்
சிந்தையும் செம்மையுற்று, பொறாமையும் பேராசையும்
கூட பெருகிற்று !
சிலமுறை மழையின் பிடியிலே
சிறை அடைக்கப்பட்டாய் !
இரவு பகல் பாராது துன்புற்று, அல்லலுற்று
விடியும் இரவிற்காக விடியாது இருந்தாய் !
ஒரே தாயின் பிள்ளைகளே, சகோதரனிடம்
கை ஏந்தும் நிலையிலே செய்வதறியாது
இருந்ததைக் கண்டு நீ திகைத்துப்போனாய் !
தாயுணர்வோடு, எழுச்சி மிக்க இளைஞர்கள்
தாமாகவே முன் வந்தனர் !
ஓரிடம் அல்லாது எல்லா இடங்களிலும்
சுற்றி திரிந்தனர் !
சிதைந்துக் கிடந்திருந்த அன்னையை
மீட்டெடுக்க எட்திசையும் சென்றனர் !
மின்னல் வேகச் சாதனங்கள் தம்
கழுகு பார்வைக் கொண்டு
அசுர பசியை சமாளித்தது !
அத்தியாவசியமே ஆடம்பரமோ என்று
நிலை கவிழ்ந்திருந்த தருணத்திலே,
தோள் கொடுத்து, தட்டிக் கொடுத்து
உன்னால் முடியும் என்று புதிய தோர்
விடியலை உருவாக்கினர் ! நிலை மாறியது ...
இனி பயமில்லை !!
இயல்பாக இயல்பினை நோக்கி
நகரத்தொடங்கிய இந்நகருக்குள் படை எடுப்பு நடந்தது,
நுண்ணுயிற் தொற்றுயிரி புகுந்தது !
வீட்டிற்குள்ளே அகப்பட்டு
சுற்றத்தின் நன்மை பாராட்டி
ஒடுங்கிக் கொண்டிருக்கும் காலக்கட்டத்திற்கு
தள்ளப்பட்டது !
எழில் வளம் ஒங்கி செல்வ வளம் குன்றியது
எம பலம் குன்றி அரசு மற்றும் பொதுத் துறை பலம் ஒங்கிற்று !
மீண்டும் மானுடம் வெற்றி கொடி பற்றி
தெருவெங்கும் மகிழ்ச்சி வெள்ளத்தில்
தன்னலமற்று திரியலாகாதா என்ற அவா, ஏக்கம் ...
வீழ்வது போல் தோன்றினாலும்
வீழ்த்துவோம் ! வாழ்வோம் !