மனித வைரஸ்கள்
மனித வைரஸ்கள்


பூமித்தாயே..
மனித வைரஸ்களிடமிருந்து
உன்னைக் காத்துக்கொள்ள
நீயும் அணிந்துகொண்டாயோ?
முகக்கவசம்..!
மனிதா..
உன்னைக்காக்க மட்டுமல்ல,
இந்த உலகைக் காக்கவும்
ஒருநாள் தேவை "முகக்கவசம்"..!
பூமித்தாய்க்கு ஒன்றும்
புதிதல்ல முகக்கவசம்!
மனிதா..
உன் காற்று மாசினால்
காலவரையின்றி அணிந்திருக்கிறாள்..!
அழகிய உலகுக்கு,
மனிதா..
உன் அறிவீனத்தால்
நீ கொடுத்த அன்பு பரிசோ
இந்த முகக்கவசம்..!