மரம் எனும் வரம்..!
மரம் எனும் வரம்..!

1 min

23.7K
மரம்,
இயற்கையன்னையின்
வரம்..!
மனித உறவுகளைவிட மரங்கள் உன்னதமானது..
மரம்,
முளைக்கும் போதே
முயற்சியை கற்றுதருவது..!
சுயநலம் பாராது..
பொறாமை கொள்ளாது..
துரோகம் என்பதை
துளியும் அறியாது..
நம் தனிமையில்
துணை நிற்பது..!
நமக்கே தெரியாமல்
நமக்காய் உழைப்பது,
நமக்காய் நம்மோடு வாழ்வது..
குழந்தைக்கு
தாலாட்டும் தொட்டிலாய்,
களைப்பில்
தலைசாய்க்க கட்டிலாய்,
சாகும்போது சவப்பெட்டியாய்
நமக்காய் உருமாறுவது..!
மனித உறவுகளைவிட
மரங்கள் உன்னதமானது..
மரங்களோடு உறவாடுவோம்..
மரங்களை நேசிப்போம்..!