STORYMIRROR

PALANI A

Abstract

4  

PALANI A

Abstract

எழில்ரதம்

எழில்ரதம்

1 min
22.5K

வாகன தொழில்நுட்பத்தின்

வழிகாட்டி நீ..

ஏழைகள் வீட்டிலும் இருந்த

எழில்ரதம் நீ..


சிறுவயதில் எங்களின்

சிறகானாய் நீ..

உயர்ரக ஊர்திகளால் - ஏனோ

சிறகிழந்தாய் நீ..


உன்னை பயன்படுத்தியவரை

எத்தனை நன்மைகள்..

எங்கள் உடலுக்கும்,

இந்த உலகுக்கும்..


உன்னை மறந்த பின்

எத்தனையோ கெடுதல்கள்..


காற்றுமாசுபட்டால் கலங்கி

நிற்கின்றோம்..

உடல் உழைப்பின்றி

உழன்று கிடக்கின்றோம்..


செயற்கையின் சேதம் உணர்ந்து

இயற்கைக்கு மாறும் நாங்கள்,

உன்னைத் தேடி விரைவில் வருவோம்..


உனக்கு சிறகு தந்து - மீண்டும்

உனைச் சிறகடிக்கச் செய்வோம்..!


Rate this content
Log in

Similar tamil poem from Abstract