கடவுளின் காத்திருப்பு..
கடவுளின் காத்திருப்பு..


பரபரப்பான சாலையோரம்
பரிதாபமாய் ஓர் உருவம்..
உடைமைகள் சிறு பையில்
ஊன்றுகோலோ ஒரு கையில்..
வருவார் திசை பார்த்து
வழியோரம் காத்திருக்கிறார்..
அவரின் அழுக்கான ஆடைகண்டு
அருகில் யாரும் வருவதில்லை..
இந்த கலியுக வாழ்க்கையிலே
அவரிடம் கனிவு காட்ட யாருமில்லை..
அவரை கடக்கும் மனிதர்களிடமோ
கடுகளவும் கருணையில்லை..
கருணையில்லா இந்த மனிதர்களே
கடவுளைத் தேடுகிறார்..
கருணையுள்ள ஒரு மனதைத்தேடி
அங்கே காத்திருப்பது,
கடவுளோ? யாரறிவார்..!