சேமிப்பு
சேமிப்பு


அன்பினை சேமியுங்கள்,
ஆண்டவன் ஆசி அருளிட..
நேரத்தை சேமியுங்கள்,
வெற்றிக்கு இன்னும் உழைத்திட..
நல்ல நூல்களை சேமியுங்கள்,
நற்பண்புகளை வளத்திட..
நண்பர்களை சேமியுங்கள்
நல்வழி படுத்திட..
உறவுகளை சேமியுங்கள்,
ஆபத்தில் உதவிட..
இன்றே வருமானத்தை சேமியுங்கள்,
வயதாகும்போது வளமாய் வாழ்ந்திட..
இயற்கை வளங்களை சேமியுங்கள்,
வரும் தலைமுறை
நலமாய் வாழ்ந்திட..!