வானினும் பெரிது வாழ்க்கை
வானினும் பெரிது வாழ்க்கை

1 min

23.9K
போகும் இடத்திற்கு
பல பாதைகள் உண்டு..
நீ காணும் இடர்களுக்கு
பல தீர்வுகள் உண்டு..
சோதனை என்பது
வெறும் சோதனையல்ல - அது
தீர்வுக்கான போதனையே..
முயற்சியே செய்யாமல்
முடியாது என்பது,
உன் வெற்றிக்கு போடும்
கைவிலங்கு..
முடியாது என்ற கைவிலங்கை நீ
முயற்சி கொண்டே
தகர்த்திடு...
தோல்விகள் பல வரினும்
தொடர்ந்து நீ ஓடிடு..
வானளவு வாய்ப்புகளை
உனக்காய் உருவாக்கிடு..
வானினும் பெரிய இந்த
வாழ்க்கையில் வெற்றியை
உனதாக்கிடு..!