STORYMIRROR

Ananth Krishnasamy

Abstract

4  

Ananth Krishnasamy

Abstract

இயற்கையோடு உறவாடு

இயற்கையோடு உறவாடு

1 min
494

கண்களுக்கு விருந்தாகும்

கவலைகளுக்கு மருந்தாகும்

இயற்கையோடு உறவாடு!

மலைகள் சூழ்ந்த நிலம்

மத்தியிலே கண்கவர் வளம்

இயற்கையோடு உறவாடு!

வண்ணங்களை தன்னோடு கலந்து

எண்ணங்களை உன்னோடு கலக்கும்

இயற்கையோடு உறவாடு!

ஆழ்கடலும் அதிசயமே

ஆலங்கட்டி மழையுமே

இயற்கையோடு உறவாடு!

உதிக்கும்போதும்

மறையும்போதும்

கதிரவனின் கதிர்வீச்சு

இயற்கையோடு உறவாடு!

தவழும் மேகம் தனி அழகு

பெய்யும் மழை பேரழகு!

இயற்கையோடு

இயன்றவரை உறவாடு

இன்பத்தோடு விளையாடு!!!



Rate this content
Log in

Similar tamil poem from Abstract