மலரின் பிறவிப் பயன்
மலரின் பிறவிப் பயன்
அன்புள்ள நாளேடே,
ஊரும் உலகெலாம் அடங்கிக் கிடக்க
கோயில் தெய்வங்களெலாம்
ஒவ்வொருவர் மனதிலும்
ஓடும் வேண்டுதல்களுக்கு செவிசாய்க்க
ஊருக்குள்ளும் மருத்துவமனைகளிலும்
செவிலியராய் மருத்துவராய் காவலராய்
துப்புரவுப் பணியாளர்களாய்
அயராது உழன்று கொண்டிருக்க
மண் தந்த வளத்தினிலே
வனப்பாய் வளர்ந்து நின்று
வண்ணமயமாய் கண் கவர்ந்து
தலையசைத்தே உவகையூட்டிய
செவ்வந்திப் பூக்களுமே -
மண் மகளுக்கு பூசை செய்து
பிறவிப் பயனடைந்தனவே !