குறுநகைப் பூக்கள்
குறுநகைப் பூக்கள்
குறுநகைப் பெட்டி சொல்லும்
மகிழ்ச்சிக்கான மருத்துவக் குறிப்பு..
சிரிப்பும் ,புன்னகையும்..!
அறிவியல் வளர்ச்சியால்
அடங்கியது,
உலகம்
நம் உள்ளங்கையில்..
உள்ளத்து உணர்வுகள்
சிறு குறுநகையில்..!
வடிவியல் பெட்டிக்குள்
இன்னமும்
வாழ்ந்து கொண்டுதான்
இருக்கிறது..
குறுநகை பூக்கச்செய்யும்
குட்டிக்குட்டி நினைவுகள்..!
ஆச்சரியம்தான்..!
நாம்
வீட்டிற்குள் முடங்கினால்
இயற்கையில்
இத்தனை மாற்றங்களா..!?