பலமுகம் கொண்ட சமூகம்!!
பலமுகம் கொண்ட சமூகம்!!
பலவித முகங்கள் நடுவே
சிரித்திடும் இதயம் உண்டு
சிரித்திடும் இதயம் என்றும்
ரணப்பட்ட மனமே ஆகும்!!
அழுகின்ற நிலையும் வரலாம்
சில துரோகத்தின் நிழலாய் வரலாம்
உன் சிரிப்பினில் அதனை வென்று
மறைத்திடு அந்த வேதனை சுவடை!!
வெறுப்புகள் நிறைய பெறலாம்
அவமானமும் சேர்ந்தே வரலாம்
உன் கண்களின் நம்பிக்கை கொண்டு
அதை எரித்திடு அழகாய் என்றும் !!
ground-color: rgba(255, 255, 255, 0);">நட்புகள் வாழ்க்கையில் உண்டு
அதில் நடிப்புக்கு இடமே இல்லை
அந்த அழகிய உறவுக்கு என்றும்
சிரித்திட மட்டுமே தெரியும் !!
காதலில் கூட பலமுகம் உண்டு
கண்ணியம் காக்கும் கடமையும் உண்டு
வேதனை என்னும் வலிகளும் உண்டு
அதை எதிர்த்து நிற்கும் துணிவும் உண்டு!!
பலமுகம் கொண்ட சமூகம் முன்பு
சிரித்து வாழ்ந்திடும் தைரியம் வேண்டும்
உணர்வுக்கு இங்கே கடிவாளம் போட்டு
மகிழ்ச்சியை பகிர்ந்தே வாழ்ந்திடு நண்பா!!