STORYMIRROR

sharanyaa satyanarayanan

Abstract

3  

sharanyaa satyanarayanan

Abstract

அன்பே சிவம்! மனிதமே மதம்!!

அன்பே சிவம்! மனிதமே மதம்!!

1 min
625

அன்பே சிவம்!

மனிதமே மதம்!!


பசிக்கும் வயிற்றுக்கு பாலும்

கலங்கும் உயிருக்கு தோலும் 

கொடுக்கும் குணமே இறைவன்!!


கண்ணில்லா மனிதனுக்கு ஒளியாய் 

துணையில்லா உயிருக்கு உறவாய் 

இருக்கும் மனமே சமயம்!!


கருணையின் வடிவாய் கடவுளை பாரு !

மனிதத்தின் உருவாய் மதத்தினை நாடு!!


இரையை புசிக்கும் மிருகமாய் - உன்

இதயத்தை நொறுக்கிடும் மதம்!!


இறைவனா கேட்டான் மதத்தை?

"பிரித்திடு மனிதா சமூகத்தை 

வதைத்திட சொன்னானா மனிதத்தை?"


அன்பெனும் சமயத்தை

கருணை எனும் கடவுளாய் 

நிரூபிக்கும் வழியே மனிதம்!!!


மிருகங்கள் வாழும்

ஆவேசத்தின் நிழலாய் 

சீர்கெடும் நிலையே மதம்!!!


இறைவனின் இருப்பிடம் தேடாதே !

அவன் உருவத்தில் மதத்தை நாடாதே!!


உள்ளதில் கருணையை நிறைத்து !

உன் செயலில் இறைவனை நிறுத்து !!


உன் சொல்லும் செயலும் அன்பினை விதைக்கும் 

அந்த அன்பினில் எளியவன் இறைவனை காண்பான்


இனி ஒரு விதி செய்வோம்

உலகினை சரி செய்வோம்

இயற்கை இறைவனாக 

கருணை காற்றாக

மனிதமே மதமாகட்டும்!!



Rate this content
Log in

Similar tamil poem from Abstract