தனக்கு தானே
தனக்கு தானே
சிற்பமாக தன்னை
செதுக்கி கொள்ள
அவளுக்கு கிடைத்தது
ஓர் உளி.
சுத்தியல் அவள் கையில்
கொடுக்க அச்சம் கொண்டது
அவளை சுற்றியிருந்த உறவு.
உள்ளங்கை இரும்பாக
ஓங்கி ஓங்கி எழுந்த
ஓசையுடன்
உருவாக்கி கொண்டாள்,
தனக்கு விருப்பப்படட் உருவத்தை தானே.