மட்டைப்பந்து விளையாட
மட்டைப்பந்து விளையாட
மட்டைப்பந்து விளையாட
மண்படிந்த தலைமயிரோடு ஓடுகிறாள்.
கோப்பை பெற்று
கேமராவின் முன் நின்று
அதன் ஒளியில்
கண் கூசி கண் மூடாமல்
புகைப்படத்திற்கு நிற்கும்வரை
ஆழாத்திலிருக்கும் நீர்நிலையை
எடுக்க நினைக்கும் மனிதர்களை
தடுத்து தடம் மாற்ற
முயற்சி செய்யும்
உடைக்க முடியா பாறையாய்
பாதையெங்கும் தன்னை மாற்றிகொள்கிறாள்.