STORYMIRROR

SANTHOSH KANNAN

Inspirational

4  

SANTHOSH KANNAN

Inspirational

மருத்துவேரைத் தேடி

மருத்துவேரைத் தேடி

1 min
272

தேங்கும் நன்னீரில் தெங்குக் கொசு தங்கும் முட்டையிட்டு தவழும் திசு வாங்கும் குளிர்சாதனப் பெட்டி பின் தூங்கும் இரவில் உயிரைக் குடித்து


தோலின் மேலே சிவப்பு நிறம் தொல்லை தரும் உடம்பு வலி

எல்லை மீறி நேரம் ஆகிட

துவண்டு போவான் மனிதன் தினம்


மருத்துவ உலகம் மிரண்டு போக மனிதன் காக்க மருந்து இல்லை ஆங்கில மருந்து அரை வேக்காடு அன்றே சொன்னான் உழவன் குடி


வேம்பு போக்காப் பிணி உண்டோ நம்பி அருந்த நலமாய் ஆனான் பப்பாளி இலை காய்ச்சிய நீரில் பாவம் தெங்கு பஞ்சாய்ப் பறந்தது


மருத்து வரைத் தூக்கி எறிந்து மருந்து வேரைக் கையில் ஏந்து உணவே மருந்து பயிரே உயிர் உழவே தலை உணர்ந்து வாழு


உழவர் குடியும் உணவு முறையும் உயர்ந்தே நிற்கும் உலகில் என்றும் இயற்கை மருந்தும் இனிய வாழ்வும் பாட்டன் சொன்ன பக்குவம் கேளீர்.


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational