கைபேசி
கைபேசி


தொலை பேசியின்
மேம்படுத்தப்பட்ட
கருவியாய் நீ
அவதரித்தாய்
இம் மண்ணில் .......
மன அலைகளை
இரண்டு நெஞ்சங்கள்
கலந்து உரையாடும் ....
ஒரு பெண்ணை போல்
கவர்ச்சியாய் உன்னை
காட்டவே மனிதன்
பல நிறங்கள் கொடுத்தான்
பல வடிவங்கள் தந்தான்
பல பாதுகாப்பு அளித்தான்
அளவுகளை மாற்றினான்
வளைவுகளை காட்டினான்
மெலிதாகவும் படைத்தான் - பிறகு
உன்னை கையில்
தாங்கினான்
ஏன் தெரியுமா
பெண்ணை கையில்
எடுக்
க முடியவில்லை
நீ (கைபேசி)
உள்ளங்கையில் அடங்கினாய்
அவள் (பெண்)
என்றுமே அடங்கமாட்டாள் .....!!!
இருந்தும் மனதில்
இல்லை நிறைவு
இவனுக்கு சுமையாய் ........
இன்றோ
ஏனோ நீ
தொல்லை பேசியாய்
பலரது கையில்
சுற்றி வரும் சாதனமாய் ........
இறுதியாய் .....
கைபேசி சொன்னது
மனிதனே யாரும் உனை
திருப்தி செய்யவே முடியாது
பெண்ணையும் நீ (மனிதன்) நம்பவில்லை
என்னையும் (கைபேசி) நீ நம்பாமல்
திரை பூட்டு
எண் பூட்டு
குறியீடு பூட்டு
போட்டு வைத்துள்ளாயே ......!!!