தமி
தமி
தீக்குள் விரலை வைத்தால்
என எனை எழுத்துகளால் தூண்டி
புலவனாய் உருவாக்கிய பாரதி!
அக்னி சிறகுகளாய்
எனை உலகில்
இணையத்தில் உலவ விட்ட
அற்புத கலாம்!
என் சரித்திரம் உவேசா
சொல்லாமலே விட்டிருந்தால்
தமிழ் தழைத்திருக்குமோ!
சத்தியசோதனை தந்த
காந்தி தந்த பரிசினால்
இன்று தரணியில்
பெருமையாய் சிரிக்கின்றேன்!
அடுக்கடுக்காய் ஆயிரம்
புத்தகங்கள் ஆய்வுக்கு
படித்த நூல்கள்
அலமாரியில் அழகழகாய் சிரித்தபோதும்
அப்பாவின் அன்புப் பரிசாய்
முதன்முதலாய் அளித்த
குடும்ப விளக்கு
என்றுமே பெண்ணுக்கு
சிறந்த புத்தகம் என்றே
நித்தமும் அதனை
வாசிக்கின்றேன்!